வணிக நோக்கத்திற்காக நடுகைப் பொருட்களை உற்பத்தி செய்ய விரும்புகின்ற தனியார் இறப்பர் நாற்றுமேடை வைத்திருப்பவர்களுக்கு இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் அனுமதி பத்திரம் வழங்குகிறது. அதற்காக விண்ணப்பங்கள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி/பெப்ரவரி மற்றும் ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த செயல்முறை குறித்து வருடாந்தம் பத்திரகையில் விளம்பரம் செய்யப்படுகிறது.

PB 86, RRIC 100 மற்றும் RRIC 102 குளோன்களில் இருந்து இளம் மொட்டு பொலிதீன் உறைக் கன்றுகளை உற்பத்தி செய்யலாம் அத்துடன் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தினால் இறப்பர் கன்றுகளை விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். முன்மொழியப்பட்ட நாற்றுமேடைக்கான மொட்டு மர தேவைப்பாட்டுக்காக நாற்றுமேடைகளை ஸ்தாபிப்பதற்கு உத்தேசித்துள்ள நிலத்தின் பொருத்தப்பாடு குறித்து ஆய்வு செய்ததன் பிறகு அனுமதி வழங்கப்படுகிறது, மேலும் விண்ணப்பதாரர் மொட்டு மரத்திற்காக நடப்பு ஆண்டில் 10 ஆண்டுகளுக்கு குறைவான மொட்டு மர நாற்று மேடைகளை சொந்தமாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

இறப்பர் கன்றுகளை திணைக்களத்திற்கு சொந்தமான நாற்றுமேடைகளில் இருந்து அல்லது  இறப்பர் மீள் நடுகை/புதிதாக நடுகை செய்வதற்காக திணைக்களத்தினால் அனுமதி பெற்றப்பட்டுள்ள வர்த்தக நாற்றுமேடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதால், நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படும் சகல அரச தோட்ட கம்பனிகளும் மற்றும் தனியார் இறப்பர் கன்று உற்பத்தி நாற்றுமேடைகளும் அனுமதி பெறுதல் வேண்டும்.  உரிய  ஆண்டின் ஜனவரி/பெப்ரவரிக்கான அனுமதிகளைப் பெறுவதற்கு உள்ள நாற்றுமேடைகள் அந்த ஆண்டின் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நாற்று மேடைக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.  அத்துடன் ஆகஸ்ட் / செப்டம்பர் மாதத்திற்கான அனுமதிகளைப் பெறுவதற்கு உள்ள நாற்றுமேடைகள் உரிய ஆண்டின் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நாற்று மேடைக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை நாற்றுமேடைகள் அமைந்துள்ள மாவட்டத்துடன் தொடர்புடைய உரிய பிராந்திய பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும்.

FaLang translation system by Faboba