Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் எமது சேவைகள் சேவைகள் நீடிப்பு

எமது சேவைகள்

இதை மழை காலத்திற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - (கார்த்திகை - தை)

அ. காணியில் உள்ள சகல மரங்களும் அகற்றப்படல்.

இதன் போது மீள் பயிரிடல் காணி எனின் முன்னைய பயிரிடலின் போது மரம் பட்டுப் போயிருந்த இடங்களை மரத்தை அகற்ற முன் அடையாளம் செய்தல் வேண்டும். மரத்தை பிடுங்கும் போது வேர்கள் அனைத்தும் அகற்றப்படும் விதமாக பிடுங்க வேண்டும். புதிய பயிர்களுக்கு வெள்ளை பூ விழும் நோய் வருதலை இதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.

ஆ.காணியில் மண் பாதுகாப்பு முறையும் வேலிகள் அமைத்தலும்.
காணியின் அமைவிடத்திற்கு ஏற்ப கீழ் குறிப்பிட்ட மண் பாதுகாப்பு முறையையோ முறைகளையோ நிறைவேற்ற வேண்டும்.

விவசாய முறை - சமமான முறையில் கன்றுகளை நடல்.

வேலிகள் தொடர்பாக தாழ்ந்த பிரதேசங்களில் கலை முழுமையாக அகற்றாமல் கலை கட்டுப்படுத்தல் மாத்திரமாகும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - (தை-பங்குனி)

இ).உயிரியல் விஞ்ஞான முறை

முகுனா, பியுரேரியா, டெஸ்மோடியம், போன்ற பயிரிடல் இதற்கு பொருத்தமாகும்.

வெட்டிவேர் புல் வகையை கணமாகவும் சமமாகவும் பயிரிடல்.

பந்தல் இடல் - இதற்காக வைக்கோல் அல்லது இலை உரமாக க்ளோட்டரேரியா ப்ளேமின்ஜியா மற்றும் சீமைக்கிலுவை ஆகிய இலைகளை இடலாம்.


ஈ. பொறி முறை
காண் வெட்டுதல்.- நிலத்தில் இயற்கையாக அமைந்த நீர் வழிகளை பிரதான காண்களாக அமைக்க கூடியதுடன் இரு காண்களுக்கிடையிலான இடைவெளி 60 மீட்டராக அமைதல் வேண்டும். சார்பான காண் சமமான கோடாக அமைவதுடன் அவை 120ற்கு ஒன்றாக அமைய வேண்டும். பயிரிடல் வரிசைகளில் 1.5 மீட்டரில் இருந்து 1.8 வரையான தூரத்திலான சார்பான காண்கள் அமைதல் வேண்டும்.

கல் வேலி அமைத்தல்.- காண் வெட்ட சிரமமான கற்களைக் கொண்ட நிலங்களில் சமமான கல் வேலி அமைத்தல் பொருத்தமாகும். கல் வேலி அரமக்கும் போது கல் வேலியின் மேற் பக்கம் சமமாக அமைவதுடன் கல் வேலியின் அடித்தளம் உச்சியை விட அதிக அகலத்தை கொண்டிருக்க வேண்டும்.

அ. சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 510 இறப்பர் கன்றுகள் முதல் 520 கன்றுகள் வரை நடலாம்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம்-(பங்குனி)


வரிசை முறை 3.5x5.5 m


சதுர முறை 4.3x4.5 m


ஊடுபயிர் செய்கைக்கு எதிர்பார்க்கப்பட்ட காணி எனின் மேற்குறித்த இரண்டாம் முறை நடைமுறைபடுத்தப்பட வேண்டும். அதே போல் மீள் பயிரிடற் காணி எனின் இடப்பரப்பை மாற்றஞ் செய்து வேறொரு பரப்பு முறையை தெரிவு செய்தோ பழைய குழிகளை மீண்டும் பயன்படுத்தாது வெள்ளை பூ விழும் நோய் ஏற்படலை குறைத்துக் கொள்ளல்.

குழி ஒன்றின் அகலம் அடி 2x2x2.5 ஆகும். காணி கல் நிறைந்தது எனின் குழி வெட்டும் போது அங்கும் இங்குமாக செய்து கொள்ள முடியும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம்-(பங்குனி)


அ. குழியை மூடும் போது கல் வேர் என்பவற்றை முற்றாக அகற்றி முழுதும் பிற்பகுதியில் மண்ணால் நிரப்பப்பட வேண்டும். சாதாரணமாக கன்று நடுகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே குழிகளை வெட்டி நிரப்பி இயல்பாகவே இறுக இடமளிக்க வேண்டும்.

கன்று நடுகையில் பருவ மழை ஆரம்பித்ததோடு மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கிய காலமாக அமைவது வைகாசி ஆனி போகங்களாகும். மொணராகலை பதுளை அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கன்று நடுகை வடகீழ் பருவ காற்று மழை வருகின்ற ஐப்பசி போகத்திளாகும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம்(வைகாசி-ஆனி ),(ஐப்பசி-கார்த்திகை)

அ. பொருத்தமான கன்றை தெரிவு செய்தல்.
பிஞ்சு ஒட்டு இறப்பர் கன்று நடுதல் மிகப் பொருத்தமாகும். அதற்கு காரணம் கன்று உற்பத்தியில் மற்றும் நடுகையின் போது ஆரம்ப முறைக்கு பாதிப்பு ஏற்படாமையால் உடனடி விருத்தி வேகத்தைக் காட்டுவதற்காகும். இலை 2 வரிகளுடைய மேல் உள்ள இலை வரி முற்றியுள்ள ஒட்டு இறப்பர் கன்றை நாட்டுவதற்காகவும்.

ஆ. துறையில் கன்றை நாட்டுதல்.
முன்பே மண்ணை நிரப்பி ஆயத்தம் செய்யப்பட்ட குழியில் கொஞ்சம் மண்ணை அகற்றி பொலித்தின் பையில் நடப்பட்ட இறப்பர் கன்றுகளை குழிக்கு அருகில் கொண்டு சென்று பொலித்தின் பையின் அடிப் பகுதியை மட்டும் நீக்கி தரை மட்டத்தை விட 2 அங்குலம் குறைவான மட்டத்தில் ஒட்டு குருத்து அமையுமாறு அமையும் விதத்தில் இறப்பர் கன்றை குழியில் வைத்து மண்ணை இட்டு மூடவும் ஒட்டு முனை முற்றாத ந்தர்ப்பத்தில் (பச்சை நிறத்தில் இருந்தால்) ஒட்டு சந்தியை மண்ணால் மூடப்படக் கூடாது. குழியின் மிகுதி 2 அங்குல அளவை முறையாக மூட வழி செய்யுங்கள். ஒட்டு முனை பச்சை நிறம் எனின் குழியில் நீர் தங்கினால் ஒட்டு முனை கெட்டுப்பபோக வாய்ப்புள்ளதால் தாழ்ந்த பகுதிக்கு உடைத்து காண் வெட்டி நீர் வழிந்தோட வழி செய்யவும்.

ஊடுபயிர் ஒன்று அல்லது கலப்புப் பயிர் ஒன்றை இறப்பருடன் பயிர்ச் செய்ய சிபாரிசு செய்யப்படுமெனின் கன்று நடும் பரப்பு 2.5x7.75 அ இறப்பர் கன்றில் இருந்து 8 அடிக்கு அப்பால் ஊடுபயிர் அல்லது கலப்புப்பயிர் பயிரிடப்பட வேண்டும். இறப்பருடன் கலப்புப் பயிராக தேயிலை பயிரிடப்பட்டால் பரப்பு 2 இனங்கண்டு தரப்பட்டுள்ளன. முதலாவது பரப்பு 2.4 x12அ இதற்கேற்ப இறப்பர் நிரை இரண்டிற்கு இடையில் 7 தேயிலை நிரைகளை நடலாம். இரண்டாம் பரப்பு 2.4x18அ இதன் கீழ் 2 இறப்பர் நிரைகளுக்கு இடையில் 12 தேயிலை நிரைகளை நடலாம்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் (வைகாசி-ஆனி ), (ஐப்பசி-கார்த்திகை)


இறப்பர் பயிர்ச்செய்கையில் முதிர்ச்சியடையாத சந்தர்ப்பத்தில் பயிரிட முடியாத ஊடுபயிரான வாழை அன்னாசி கொடிதோடை கரும்பு வருடாந்த போகப் பயிர்கள் மூலிகை செடிகள்.


அலகொன்றின் நிலப்பிரதேசத்தில் உள்ள இறப்பர் மரத்தின் தொகைக்கு ஈடாக பயிர்ச்செய்யக் கூடிய ஊடுபயிர்கள் - கோப்பி கொக்கோ.


அலகொன்றின் நிலப் பிரதேசத்தில் உள்ள இறப்பர் மரத்தின் எண்ணிக்கையில் மாற்றம் செய்து ஊடு பயிர்செய்கை மேற்கொள்ளல் - தேயிலை கறுவா மிளகு.


இறப்பர் பயிர்ச்செய்கையில் முதிர்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் பயிரிட முடியாத ஊடுபயிரான கராம்பு வெனிலா பிரம்பு மற்றும் என்தூரியன்.

இதற்கு மேலதிகமாக கோழி வளர்ப்பு தேனீ வளர்ப்பு போன்ற மேலதிக வருமான மார்க்கங்களை இறப்பர் காணிகளில் மேற்கொள்ள முடியும். மற்றுமொரு ஊடுபயிர் வருமான மாரக்கமும் ஆகும்.

அ. மரத்தின் வளர்ச்சி வேகத்திற்கும் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள விதப்புரைக்கப்பட்ட பசளை குறித்த அளவில் குறித்த முறையில் குறித்த காலத்திற்குள் மரத்திற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இறப்பர் பசளை கலவைகள் 2 உள்ளன. யூரியா என்ற ரீதியில்பசளைக் கலவை மற்றும் அமோனியா சல்பேற்று என்ற பெயரிலான பசளையாகும். யூரியா என்றதான பசளைகளில் அடங்கிய நைதரசனின் விகிதாசாரம் அதிகம் என்பதால் யூரியா என்றவாறான பசளைப் பாவணை மிக இலாபகரமானது.

அ). கன்று நாட்டிய முதல் மாதத்தில் இருந்து சந்தர்க்கத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை 2 வருடங்களாகவும் 3 ஆம் மற்றும் நான்காம் வருடங்களிலும் அதே விதமாக இடப்படும்.
அதேவேளை பாலெடுக்கும் வரை  வருடத்திற்கு 3 முறை பசளை இடவேண்டும். பாவெடுக்கும் இறப்பர் மரம் ஒன்றிற்கு வருடத்திற்கு ஒரு தடவை அல்லது 2 தடவை பசளையிடல் ஊழியம் இலகுவில் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்ட வேண்டும்.

ஆ). மேற்கொள்ளப்பட வேண்டிய காலம்
பொலித்தீன் பைக்குள் நட்ட பின் நட்டு 2 வாரங்களுக்குப் பின் மற்றும் ஒட்டு வைத்த 2 வாரங்களுக்கு முன் குற்றியை வெட்டி அகற்றிய பின் முதல் இலை வரியின் பின் (நட 2 வாரங்களுக்கு முன்)


ஆ. பசளை இடப்பட வேண்டிய அளவு..
யூரியா என்றதான பசளையை முதல் வருடத்தில் மரம் ஒன்றிற்கு 275 கிராம் படி 4 தடவைகளுக்கும் இரண்டாம் வருடத்தில் 550 கிராம் படி நான்கு தடவைக்கும் மூன்றாம் வருடம் மற்றும் நான்காம் வருடங்களில் 800 கிராம் படி மூன்று தடவைகளும் ஐந்தாம் வருடத்திலிருந்து மரம் கீறி பால் எடுக்கும் வரையிலும் 1100 கிராம் படி மூன்று தடவைளும் பசளை இடப்பட வேண்டும். இதற்கு புறம்பாக இறப்பர் மரம் ஒன்றிற்கு முதலாம் வருடத்தில் மக்னீசியப் குறைப்பாட்டை நிவரத்திப்பதற்கு கீசரைட் 75 கிராமும் இரணடாம் வருடத்தில் இருந்து பாலெடுக்கும் வரை அக்குறைபாட்டை நிவர்த்திப்பதற்கு டொலர்மைட்டை கிராம் ஒழுங்கில் 150,200,200,250 என இறப்பர் பசளையுடன் கலவாது ஒரு மாத கால இடைவெளிகளுடையதான இறப்பர் மரத்திற்கு இட வேண்டும். டொலர்மைட் எவ்வகையிலும் இறப்பர் பசளையுடன் கலந்து பயன்படுத்த முடியாது. கீசரைட் பசளை இறப்பர் பசளையுடன் கலந்து இட முடியும். பாலெடுக்கும் பயிர்ச் செய்கைகளுக்கு மெக்னீயம் குறைப்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காக டொலர்மைட் பாவனையை தவிர்த்துக் கொள்ளவும். அதற்கு கீசரைட் பாவனையே பொருத்தமாகும்.


இ). பசளை இடும் முறை
முதலாம் மற்றும் இரண்டாம் வருடங்களில் இறப்பர் கன்றுகளுக்கு பசளையிடலில் இறப்பர் மரத்தின் இலை வரி பக்கத்தை பார்த்து இவ் அளவிற்கு இறப்பர் மரத்தைச் சுற்றி பசளை இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும். அவ்வாறே இறப்பர் மரத்தின் ஆரம்பத்திலிருந்து ஒரு அடி தூரத்தில் மாத்திரமான விதமாக வட்டத்திலான முறையில் மர வளர்ச்சியுடன் மரத்தின் ஆரம்பத்திலிருந்து 3 அடி - 4 அடி தூரத்தில் 3 இடங்களில் அல்லது 4இற்கோ முள்ளால் கிளறி வாய்களுக்கு குறிப்பிட்ட அளவை இட்டு மூடிவிட விட வேண்டும் அவ்வாறே பசளை இடும் வலையங்களில்களை அகற்றி வைத்தல் மிக அவசியமாகும். பந்தல் இடுவதாயின் பசளை இட்ட பின் மரத்தின் வேருக்கு ஒரு அடி தூரத்தில் வட்டத்திலான விதமாக இட வேண்டும். அதற்காக வைக்கோல் தாள் போன்றவை பொருத்தமாகும்..


ஈ. பசளை இட வேண்டிய காலம்.

கடுமையான மாரிக்காலத்திலும் கடுமையான கோடைக் காலத்திலும் பசளையிடக் கூடாது. வளர்ச்சியடைந்த பயிர்ச்செய்கைக்கு பசளையிடலில் இலைகள் உதிர்ந்து துளிர்க்கும் மாதத்தின் பின் பசளை இடவேண்டும். ஈர வலயத்தில் ஆனி மாதத்திற்கு முன் வளர்ச்சியடைந்த பயிர்ச் செய்கைக்கு பசளை இடப்படல் வேண்டும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம்
2 வாரங்களுக்கு ஒரு முறை

உ. வளர்ச்சியடைந்த பயிர்ச்செய்கைக்கும் பால் வெட்டும் பயிர்ச்செய்கைக்கு பசளை இடல்.

பிரதேசம் புதிய பட்டை வளரும் பட்டை வருடத்திற்கு இடப்பட வேண்டிய அளவு.
கேகாலை, குருணாகலை, கண்டி யூரியா 200 கிராம் எப்பாவல ரொக் பொஸ்பேட் 100 கிராம் யூரியா150 கிராம் மியுரியேட் ஒப் பொடெஸ் 75 கிராம் 3 தடவை
ஏனைய சகல பிரதேசங்கள் யூரியா 200 கிராம் எப்பாவல ரொக்பொஸ்பேட் 100 கிராம் மியுரியேட் ஒப் பொடேஸ் 200 கிராம் யூரியா 150 கிராம் மியுரியேட் ஒப் பொடெஸ் 150 கிராம் 3 தடவை

பசளை கலவைகளின் தொகுதி.

கலவை எமோனியம் சல்பேட் டயி எமோனியம் பொஸ்பேட் பொடேஷியம் சல்பேட் எப்சம் உப்பு முழுத் தொகை
R/YB 13:17:6:3 31 38 13 18 100
&R/YB 9:12:11:5 23 25 23 29 100
R/YB 13:16:16 32 35 35 - 100

ஊ. நாற்று மேடைகளுக்காக பசளையிடல்.

பிஞ்சு ஒட்டு தவரணைக்காக பசளையிடல். இதற்காக 100மூ திரவப் பசளை பயன்படுத்தப்பட வேணடும். பசளைக்கலவை மண்ணின் தரத்திற்கு ஏற்ப வேறுபடும். ஆரம்ப தரங்களில் அமைந்த கேகாலை குருணாகலை மாவட்டங்களுக்காக R/YB கலவையில் 13:17:6:3 கலவையிலும் R/YB 9:12:11:5 மாத்தளைப் பிரதேசத்திற்கும் R/YB 9: 12 :11:5 ஏனைய இறப்பர் பயிர்ச்செய்யும் சகல மாவட்டங்களில் இடப்பட வேண்டும். .

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம்
ஒவ்வொரு மூன்றுமாதங்களுக்கு ஒரு தடவை ஒட்டு செய்ய 2 மாதங்களுக்கு முன் வருடம் முழுதும்.

ஏ. பிஞ்சு ஒட்டு கன்றிற்கான விதப்புரை

அளவு
ஒரு பொலித்தீன் பைக்கான 50 கிராம் ஏற்றுமதி செய்துள்ள ரொக் பொஸ்பேட்
பொலித்தீன் பைக்கான முதல் பசளைக் கலவையில் 50 மில்லி லீட்டர்
ஒரு பொலித்தீன் பைக்கான இரண்டாம் பசளை திரவத்தில் 50 மில்லிலீட்டர்

ஐ. பசளை இடும் முறை
முளைத்த விதைகளை பொலித்தீன் பைகளில் நடுவதற்கு முன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 50 கிராம் ரொக்பொஸ்பேட்டை பொலித்தின் பையில் மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். தேவையான பசளையை 4.5 லீட்டர் நீருடன் கலந்ததும் அத்திரவத்தில் 50 மில்லி லீட்டர் அளவே பயன்படுத்த வேண்டும்.

ஒ. மூடு பயிர்களுக்கு பசளையிடல்.
பசளை கன்று ஆரம்பிப்பதில் ஒரு சதுர மீட்டருக்கு 100 ரொக்பொஸ்பேட் இட வேண்டும். பசளை புல் வளர்ந்த பின் முதல் வருடத்தில் ஒரு ஹெக்டெயாருக்கு 100 இலிருந்து 200 வரையான அளவு ரொக்பொஸ்பேட் வேலிக்கு தெளிப்பதனால் பயிரிடலில் விருத்திக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும்.

ஓ. நாற்றுமேடைகளுக்கு பசளையிடல் ( ஆரம்ப நாற்றுமேடை)
ஆரம்ப தரத்தில் மண் மற்றும் ஹோமாகம தரத்தில் மண்ணிற்காக நாற்றுமேடை பாத்தி ஒன்றிற்கு ரொக்பொஸ்பேட் மற்றும் டொலர்மைட் சுண்ணாம்பு 3:1 விகிதாசாரத்தில் கலந்து பசளை இட வேண்டும். ஏக்கருக்கு 4 ஆலாக்கு நாற்று மேடை பாத்தியில் 15-20 சென்றிமீட்டர் ஆழம் வரை முள்ளினால் கிளருதல் வேண்டும். இரண்டாம் வகையான மாத்தளை தரத்திற்காக ஆரம்பத்தில் 350 கி.கிராம் ரொக்பொஸ்பேட் பசளை மட்டுமே இட வேண்டும்.

விதைகள் கன்றுகளான பின் யூரியா என்றதன் படி சுரு 12:14:14 கலவையில் அளவு கிராம்.25 கீசரைட் கிராம் 50
அமோனியாவில் என்றதன் படி RU 9:12:4:2 அல்லது R/SA 8:9:4 கலவையில் 30 கிராம்

அ. கன்று நடுகை தென்மேல் பருவக்காற்று மழை காலத்தில் மற்றும் வட கீழ் பருவக்காற்று மழைக் காலத்திலும் இடம்பெறும். தொடர்ந்தும் வறண்ட காலநிலை நிலவுமாயின் கன்றுகளுக்கு நீர் பாய்ச்சவும் முடியும்.
அவ்வாறே கன்றுகளைச் சுற்றி பொருத்தமான பொருளால் மூடுதல் செய்யலாம். இதற்காக லாடாப்பு வைக்கோல் போன்றன பொருத்தமானவை ஆகும். கன்று தொடர்பாக நிரந்தரமாக ஆராய வேண்டும் என்பதோடு வேர் ஒட்டு பட்டையை உரித்து காணப்படுமாயின் அவற்றை அகற்ற வேண்டும். வேர் ஒட்டு கிளையை பிரிக்காது 8 அடி வரை உயர்ந்து வளர இடம்வைத்தல் வேண்டும். தரை மட்டத்தில் இருந்து 8 அடி நீள பகுதியான கிளை பிரிக்கப்பட்;டிருப்பின் அவற்றையும் அகற்றுதல் வேண்டும். அதற்கு காரணம் மரத்தில் பாலெடுக்கும் போது தூய மரக்குற்றி தேவை என்பதாலாகும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - முதல் 4-6 வார காலம்.

ஆ. கன்று யாதாயினும் காரணத்தால் அழிந்து இருப்பின் அதற்கு அப்பால் பொருத்தமான கன்றை நாடடுதல் வேண்டும்.

பயிர்ச்செய்கை ஆரம்பத்திலே அதற்காக வேறாக கன்று பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்போது இறந்த கன்றிற்காக அக்கன்று இறப்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தே செயற்படவேண்டும். அதன்போது தரிசிவ்வாத தொடர்ச்சியான பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம்

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - கன்றுகளுக்கு 2 வருடம் ஆன போது

இ. கிளை பிரித்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

புசளை இறப்பர் வகைகளில் கிளை பிரிப்பு இயற்கையாகவே இடம்பெறும். எனினும் RRWC 121 வகையில் சிலவேளைகளில் கன்றுகள் கிளை பிரிவடையாமல் மரம் நேராக உயர்ந்து வளரும்.. அதன்போது 8 அடிக்கு மேல் கிளை பிரித்தலுக்காக மரத்தின் முற்றிய உயர்ந்த இலை அரும்பு அல்லது வேறு இறப்பர் மரத்தின் முற்றிய இலையை பயன்படுத்தி உச்சியை மூடுவதன் மூலம் கிளை பிரிப்பு செய்ய முடியும். எவ்வாறாயினும் குருத்தினை வெட்டி கிளை பிரிப்பு செய்ய வேண்டாம்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - வருடம் முழுவதும்

ஈ. இறப்பர் மரத்தைச் சுற்றி 3-4 அடிகள் வரை களை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - வருடம் முழுவதும்

உ. உடனடி வளர்ச்சியை காட்டும் முகுனா போன்ற மூடுபயிர் பாதுகாப்பு இன்றி காணப்படின் இறப்பர் மரங்களில் அதனை சுற்றி மேலேயே சென்றுவிடும். ஆதனால் அவ்வாறான மூடு பயிர் வளர்ப்புடன் நடாத்திச் செல்லப்பட வேண்டும்.

இறப்பர் மரத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு சற்தர்ப்பங்களில் பாதிப்பு ஏற்படலாம். அதற்கேற்ப,

இலைகளில் பீடிக்கும் நோய்
மரக் குற்றியில் பீடிக்கும் நோய்கள்
வேர்களில் பீடிக்கும் நோய்கள் என வகைப்படுத்தலாம்.

இவற்றில் மிகவும் முக்கியமான நோயாவது வேர்களில் பீடிக்கும் நோயாகும். அதற்கு காரணம் மரம் ஒவ்வாமைக்கு ஆளானதன் பின் நோயின் தன்மையை காட்டுதலாகும்.அத்துடன் வேர் நோய் தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும். பழைய பயிர்ச்செய்கையை அகற்றும் போது முழுமையாக வேர்கள் அகலும் விதமாக மரம் பிடுங்குதலும் கன்று நடுகையில் சிகிச்சையளித்தல் செய்தலில் பெரும்பாலும் இறப்பர் கன்றை வேர் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இலை மஞ்சள் நிறமாதல் அடி பக்கத்தின் கிளைகள் மடிந்து காணப்படுதல். அகாலத்தில் பூவும் பிஞ்சும் காய்க்கின்ற என்பனவே நோய் அறிகுறிகளாகும். நோய் ஏற்பட்ட மரத்திற்கும் சுற்றியுள்ள மரத்திற்கும் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. கருப்பு வேர் நோய் பியுசாரியம் இலை வாடுதல் உஸ்ட லயினா வேர் அழுகுதல் என்பன ஏனைய வேர் நோய்களாகும். டெபியுகொனசோல் மற்றும் ஹெக்சகொனசோல் அடங்கிய கிருமி நாசிணி இடுவதன் மூலம் இந்நோயை தடுக்கலாம். டெபியுகொனசோலில் அடங்கிய நாசிணி பொலிகர் ஒரியஷ் உம் ஹெக்சகொனசோலில் அடங்கிய கிருமி நாசிணி கன்டெஷ் இரேஷஸ்ர் உம் ஆகும்.

அ. கிளை மற்றும் குற்றிக்கு பீடிக்கும் நோய்கள்

குற்றி அழுகுதலும் பயிடொப் தொராவும்.
இளஞ் சிவப்பு நிற நோய்
உஷ்ட லயினா.
கொலியிடொட்ரிகம்

வடகீழ் பருவக்காற்று மழை காற்றடிக்கும் காலத்தில் நோயை அவதானிக்கலாம்.

ஆ. இலைகளுக்கு ஏற்படும் நோய்கள்

பிடிபுஷ் நோய்.
பயிடொப்தொரா இலை நோய்.
கொலிடொயிகம் இலை நோய்
என்தரஷ்தொஸ்
கொரிதொஸ் பொரா இலை நோய்
குருவிக்கண் நோய்.

மரக்குற்றிக்கு ஏற்படும் நோயிற்காக ப்ருனோலியம் போன்ற கிருமி நாசிணியை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த முடியும்.

இலை நோய்களுக்கான சிகிச்சை முறைகள்

டயிதெம் எம் 45, கெப்டான், என்த்ரகோல், கொப்பர்சென்டொஷ், கொபர் ஒக்சிக்லோரயிட், பெரினொக்ஸ் போன்ற இரசாயன பொருட்களை மாறி மாறி தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

அ. பால் வெட்டுவதற்கு பொருத்தமான மரத்தை தேர்ந்தெடுத்தல்.

இறப்பர் பயிர்ச்செய்கையில் புதிதாக பால்வெட்டுதலை ஆரம்பிப்பதற்கு மர எண்ணிக்கையில் 60மூ மானவற்றில் ஒட்டுதல் செய்த இடத்திற்கு மேல் இடத்தில் இருந்து 120 சென்றி மீட்டர் மேலே மரக்குற்றியைச் சுற்றி 50 சென்றி மீட்டர் இருக்க வேண்டும். அவ்வாறான பயிர்ச்செய்கையில் 45 சென்றி மீட்டருக்கு மிக அதிகமாக சுற்றளவு உள்ள இறப்பர் மரத்தை அடையாளமிடலாம்.

ஆ. இறப்பர் மரத்தில் பாலெடுப்பதற்காக மரத்தை அடையாளமிடுதல்.

மரத்தின் குற்றியை இரண்டாக பிரித்து (வெட்டு கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும் விதமாக) ஒரு பகுதியில் மட்டும் பாலெடுக்க மரம் வெட்ட வேண்டும். வெட்டின் பள்ளமானது கிடையாக 30 ஆக இருக்க வேண்டும். பால் வெட்டுவதற்காக மரத்தை அடையாளம் இடும் போது அதற்காக தயார் செய்யப்பட்ட தகரத்தை உபயோகிக்க அவசியம் ஏற்படும் போது தகரத்தில் அடையாளம் செய்யப்பட்டுள்ள சகல கீறல்ளையும் அடையாளப்படுத்தி வெட்டை சரியாக தொடர்ந்தும் பயன்படுத்த வேண்டும்.

இ. பால் வெட்டும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.
ஒரு தடவையில் வெட்டில் அகற்ற வேண்டிய பட்டை அளவு அங்குலத்திற்கு 1\20 (0.125 சென்றி மீட்டர்)
பால் வெட்டுதலில் வெட்டானது மெல்லிய பட்டைக்கு அருகில் வெட்டப்பட வேண்டிய அதேவேளை மெல்லிய பட்டைக்கு காயப்படல் எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறக் கூடாது. அவ்வாறு பால் வெட்டும் போது அதிக விளைச்சலைப் பெற்றுக் கொள்ள முடியும்.

புதிய பயிரிடலில் பால் வெட்டுதலில் வறண்ட காலநிலை காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆரம்பித்தல் பொருத்தமாகின்ற அதேவேளை முதல் 3 வருடங்களில் பங்கம் வரும் விதத்தில் பால் வெட்டுதலை ஆரம்பிக்க கூடாது. ஒவ்வொரு விளைவிற்கும் பால்வெட்டுதலில் வெட்டு 2க்கு இடைப்பட்ட சாதாரண பால்வெட்டும் நாள் 2 ஆக இருத்தல் வேண்டும். வாரத்திற்கு இருமுறை வெட்டும் நாள் கணக்கு 2 ஆக வரையறைபடுத்தல் வேண்டும். அவ்வாறே மாத்திற்கு அத்தினங்கள் 6 க்கு மேற்படாதவாறு இருத்தல் வேண்டும். இறப்பர் மரத்தின் ஒரு பகுதிக்கு துறைந்தபட்சம் 6 ஆண்டு காலம் பால் வெட்ட வேண்டும்.
பால் வெட்டுபவர்களது பற்றாக்குறைக்கும் மற்றும் பால் வெட்டம் செலவையும் குறைந்தபட்சமாக்குவதற்காக தகுந்த முறை. குறைந்த அளவில் பால் வெட்டுதல் (2 நாளுக்கு ஒரு முறை பால் வெட்டும் பயிராயின் ஹோமோன் இடப்பட்டு 3 நாற்களுக்கு ஒருமுறை பால் வெட்டும் பயிராக உருவாக்குதல்.)

ஈ. ஹோமோன் பாவனை முறை
பயிரிடலில் இலையுதிர் பாலங்கள் தவிர்ந்த வருடத்தின் ஏனைய காலங்களில் எத்ரல் 2.5% சாந்தானது வளர்ச்சிக்காக ஹோமோன் ஓரங்குள இடமாக வெட்டி மொத்தமான நீளத்திற்கும் பூசும் முறைக்கு வெட்டுடன் உயரத்தில் இருக்கும் பட்டையில் பூசுதல் வேண்டும்.
3 நாட்களுக்க ஒருமுறை பால்வெட்டுவதாயின் வருடத்திற்கு 4 -5 முறையாயின் 4 நாட்களுக்கு ஒருமுறை பால் வெட்டுவதாயின் வருடத்திற்கு 9 ஒருமுறை யாயின் அதிக சாந்தை கொண்டதான எதகொன் பாவிப்பதாயின் இளஞ்சூட்டுடனான சுடு தண்ணீருடன் கலந்து குறிப்பிட்ட சாந்தினை தயாரித்துக் கொள்ளல். வெட்டக்கு மேலே பூசுவதாயின் வெட்டுக்கு 0.5 சென்றிமீட்டர் மேலே ஒட்டுப்பால் மாறாத வகையில் பூசுதல் வேண்டும்.
வெட்டுக்கு கீழே பூசுவதாயின் (பெனல் காயமடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில்) பட்டையை ஓரளவு கிருதல் வேண்டும். ஹோமோன்களின் அதிகபட்சமான பலனை பெற்றுக் கொள்வதற்காக ஹோமோன் பூசியதன் பின் 48 மணித்தியாலங்களின் பின்னர் பால் வெட்டுதல் வேண்டும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - ஆண்டின் மாசி மாதம் தவிர்ந்த ஏனைய மாதங்களில்

உ வெட்டும் பகுதியை சரிப்படுத்தல்
பால் வெட்டும்போது பால் வெட்டுபவர்கள் சரியாக பால் வெட்டுவதை கடைபிடித்துச் செல்லதல் வேண்டும். என்றாலும் ஒருசில சந்தர்ப்பங்களில் விதப்புரைக்கப்பட்ட முறைகளை பின்பற்றி செல்லாமையால் வெட்டுமிடம் காயமடையக்கூடும். அப்போது உரிக்கப்பட்ட பட்டையில் பால் வெட்டுவது கடினமாவதோடு பட்டையின் கணம் குறைந்து செல்லக்கூடும். அத்தோடு சரியான முறையை பின்பற்றி நீண் கால பால் வெட்டுதலை ஏற்படுத்த முடியும். இவ்வாறு செய்வதனால் பால் வடியும் தன்மை அதிகரித்து செல்வதோடு அதிகமான மகசூழை பெற்றுக் கொள்ள முடியும். வெட்டும் பகுதி சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டால் நீண்ட காலம் அதிக படியான மகசூழை இறப்பர் மரத்திற்கு பாதிப்பு வராத வகையில் பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - மாசி - பங்குனி

. மழைகால கவசத்தை பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற நன்மைகள்

பால் வெட்டுபவர்களது வருடாந்த வருமானம் 40% இல் அளவில் அதிகரித்துக் கொள்ளல்.
விதப்புரைக்கப்பட்ட பால் வெட்டும் முறையை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பால்வெட்டுபவர்களை முறைப்படுத்தல்.
நிரந்தர வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
மரத்திற்கு ஏற்படும் நோய்களிலிருந்து இறப்பர் மரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதனால் மழைக்கால கவசத்தை பயன்படுத்துவதனால் நோய் ஒழிப்பிற்காக செலவிடப்படும் நிதியை சேமித்துக் கொள்ள முடியும்.

. மழைகால கவசத்தின் வகைகள்

பாவாடை முறையில் மழைகால கவசம் (ஏப்ரன் முறை)
கிசான் முறை மழைகால கவசம்

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - பங்குனி

. மழைகால கவசத்தை பராமரித்துக் கொள்ளல்.
மேற்குறித்த மழைகால கவசத்தை பயன்படுத்தக்கூடியது ஓராண்டு காலமாகும். பிற்காலங்களில் ஏற்படக்கூடிய நீர் ஒழுக்குகளை தடுத்துக் கொள்வதற்கும் மழைகால கவசத்தை பராமரித்துக் கொள்வதும் அத்தியவசிய காரணியொன்றாகும். மழையின் பின்னர் நீர் ஒழுகும் இடங்களை தேடிப்பார்த்து பசை கொஞ்சம் மீண்டும் இடுதல். மழைகால கவசம் கழடாத வண்ணம் நீர் ஒழுகினால் மாத்திரம் திரவ பசை கலவையை பயன்படுத்தி மூடுதல் வேண்டும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - வைகாசி -புரட்டாசி

. மழைகால கவசத்தை தயாரிப்பதற்காக தேவைப்படும் பொருட்கள்

பசைக்கலவை – கலவை வகை 2 . திண்ம தடிப்பான கலவை திரவ பசை கலவை
பொலித்தீன்

மொத்த சராசரி இறப்பர் உற்பத்தியில் அறைவாசிக்கு அண்மித்த அளவில் உற்பத்தி செய்யப்படும் சீட் இறப்பராகும். உயர் தரத்துடனான உயர் வகை சீட் இறப்பர் உற்பத்தி செய்தலினுள் அதிக வருமானத்தை பெறுவதோடு மாத்திரமன்றி உற்பத்தி செய்யப்படும் முடீவு பொருகளையும் தரச்சிறப்புடன் உயர்த்துவதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - ஆண்டு முழுவதும்.

அ. பாலை சேகரித்தல்

பாலை சேகரிக்கும் போது விஷேடமாக பயன்படுத்தப்படும் சகல உபகரணங்களையும் மிகவும் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். சுத்தமற்ற பாத்திரங்களில் பாலை சேகரிக்கும் போது இறப்பர் பால் கட்டியாவதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. சுத்தமான உபகரணங்களை பயன்படுத்துவதால் இறப்பர் பால் கட்டியாவதை தடுக்க முடியும். பால் உறைவதற்கான காரணம் பாத்திரமாயின் சோடியம் சல்பேற்று 1 கிலோகிராமிற்கு சுத்தமான நீர் 30 லீற்றரில் கரைத்து தயாரித்துக் கொள்ளம் புதிய சோடியம் சல்பேற்று திரவத்தில் 15 மில்லிலீற்றர்  தொடக்கம் 50 இடைப்பட்ட அளவில் வெளிக்கள பால் ஒன்றுக்காக போதுமானதன்று.

ஆ. பால் வடித்தல்.
40 மற்றும் 50 அளவிலான வடியில் தயாரிக்கப்பட்ட சல்லடைகளில் பாலுக்கு தேவையதன நீரை  கலந்து வடித்துக் கொள்ளல் வேண்டும். பித்தலை லோகத்திலான கலவையிலான வடிப்பானை பாவப்பது தகுந்ததன்று.

இ. இறப்பர் பாலை பாதுகாத்தல்
வடிக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற இறப்பர் பாலை எசிட்டினால் கலந்து கொள்ளுதல் அடுத்ததாக செய்ய வேண்டிய விடயமாகும். விற்பனையை பவனத்திட் கொண்டு எடுக்கப்படும் போமிக் எசிட் 1மூ த்தில் கலவையாக தயாரித்துக் கொள்ளல் வேண்டும். 1 எசிட் பகுதிக்கு 84 நீர்ப்பகுதியை சேர்த்து 1மூ எசிட் திரவத்தை தயாரித்துக் கொள்ளல் வேண்டும். பால் தட்டு நன்றாக சுத்தம் செய்து வடித்து தயாரித்துக் கொள்ளப்பட்ட பாலிலிருந்து 4 லீற்றர் அளவில் ஒரு தட்டுக்கு சேர்த்து தயாரித்துக் கொண்ட எசிட் கலவையில் 382.5 மில்லிலீற்றர் தொடக்கம் 425 வரையான அளவில் ஒரு தட்டிற்கு கலந்து நுரைத்ததன் பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து எசிட் அத்துடன் பாலை நன்றாக கலக்குமாறு செய்து கொள்ளவும். இதில் ஏற்படும் நுரையை அலுமினியம் அல்லது கண்ணாடி கூரினாலோ நீக்கிவிடவும். தூசி அழுக்குகள் விழாதவண்ணம் தட்டை பாதுகாத்து தட்டை மூடி வைக்கவும்.

ஈ. பால் கட்டியை அரைப்பதற்காக தயார்படுத்தல்.

முதலாவதாக ரோலில் இருக்கும் துருவினை அகற்றுவதற்காக சுத்தமான நீரினால் ரோலை கழுவவும். அதன் பின்னர் அடிக்கடி பாரத்தை மாற்றி பால் கட்டியை 3 முறை ஈரமான ரோலில் அறைத்துக் கொள்ளவும். இங்கு சீட்களில் தடிப்பமானது 3.2 மில்லிலீற்றர் மாத்திரம் ஆதல்  வேண்டும். அதன் பின்னர் ஒருமுறை மாத்திரம் டயமன் ரோலை அறைக்கவும்.

உ. சீட்டை மீண்டும் தயார்படுத்தல்
ரோலில் அறைக்கப்பட்ட சீட்டை மீண்டும் ஒருமுறை சுத்தமான நிரால் கழுவ வேண்டும். அடித்துச்செல்லும் நீரினால் இந்த சீட்டை கழுவுவதற்கு முடியுமாயின் அது மிகவும் சிறந்ததாகும்.

ஊ. வெயிலில் காயவைத்தல்.
கழுவிய இறப்பர் சீட்டை 4 மணித்தியாலங்கள் மாத்திரமான காலத்திற்குள் ஈரம் போக தூசி தவிர்ந்த இடங்களில் காயவைத்தல் வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பலனுக்கு அமைவாக சீட் இறப்பர் சூரிய ஒளியில் உலரவைத்தல் விதப்புரைக்கப்பட்டாலும் அதன்படி 2 3 நாட்களுக்கு மாத்திரமான காலப்பகுதிக்குள் சீட் இறப்பர் சூரிய ஒளியில் உலர்த்த முடியும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - 4 தொட்டு 6 மணித்தியாலங்கள்

மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் - 4 தொட்டு 5 நாட்கள்

எ. சீட்டுக்கு புகை அடித்தல்.
உயர் தரத்துடனான மூட்டப்பட்ட புகைவீட்டினுள் சீட்டை காயவைத்தல் வேண்டும். புகைவீட்டின் உஷ்னத்தன்மையும் சென்றிகிரேட் பிரிவில் 48 இருந்து 54 வரை அளவில் இருப்பது முக்கியமாகும். சீட்டை தொங்கவிடும் இராக்கை பலகையை சுத்தமாக இருத்தல் வேண்டும். இளஞ்சூட்டுடனான புகையுடன் இளந்தீயுடன் சீட்டை காயவைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அழகான தேன் நிறத்தினையுடைய சீட்டை உற்பத்தி செய்தல். அவ்வாறே நாளொன்றுக்கு ஒரு முறை சீட்டை புரட்டி தொங்க வைக்கும் இடத்தை மாற்ற வேண்டும். பசையற்ற பலகை சீட்டை காயவைத்தல் நிமித்தம் பயன்படுத்தல். தேங்காய் தோல் பயன்படுத்தலை பயன்பாட்டிலிருந்து தவிருங்கள். தேங்காய் தோலை பயன்படுத்தினால் அது ஏனைய பலகையுடன் 10மூ அளவில் இருத்தல் வேண்டும். நல்ல சீட்டை காயவைத்தன் பின்னர் புகைவீட்டினை நீக்கிவிடவும்.

ஏ. சீட் வகைப்படுத்தலும் களஞ்சியபடுத்தலும்.
இன்னும் சீட் வகைப்படுத்துப்படுவது கண்மூடித்தனமாகவே. அழுக்கு மற்றும் காயாத பகுதியாயின் அதனை வெட்டி நீக்கவும். இதன் பின்னர் நிறம், அழுக்குள்ள அளவு, காய்ந்த தன்மை அத்துடன் வேறு இருக்க வேண்டிய தரம் பற்றி கவனத்திட் கொண்டு சீட் இறப்பர் இலக்கம் 1 தொட்டு 5 வரை வகைப்படுத்தப்படும். சீட் களஞ்சியபடுத்தலில் காய்ந்த காற்றுள்ள இடத்தில் பூமியிலிருந்து 6 அங்குல மாத்திரம் உயரத்தில் இருக்குமாறு மேடை அமைத்து அதன் படி பொலித்தீனை விரித்து களஞ்சியபடுத்தல் வேண்டும். இதன் பின்னர் சந்தைக்கு அனுப்பவும்.

Mz;L KOtJk;.

4 njhl;L 6 kzpj;jpahyq;fs;

4 njhl;L 5 ehl;fs;

 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information