இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள்நடுகை மானியச்சட்டம் என்பவற்றின் சட்டவாக்க ஏற்பாடுகளை வலுவூட்டுவதற்காகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் (RDD) தாபிக்கப்பட்டது. 1934 ஏப்ரல் 12 ஆம் திகதி இறப்பர் கட்டுப்பாட்டுத் திணைக்களம் என ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் 1994 ஜூலை 1 ஆம் திகதி பலப்படுத்தப்பட்டு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.